சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4 ஆவது நாள் ஆட்டம் காலியில் இன்று நடைபெறவுள்ளது .அதற்கைமய, தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிவரும் இலங்கை அணி நேற்றைய 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அதற்கமைய, இலங்கை அணி, அவுஸ்திரேலிய அணியை விட 54 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.அதனையடுத்து, தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 414 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.