அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி தலைவரை இலக்குவைத்து ஆளில்லா விமான தாக்குதலை மேற்கொள்ள திட்டம் – 16 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டமை குறித்து தகவல்கள்!

0
9

அவுஸ்திரேலிய எதிர்கட்சி தலைவரை  இலக்குவைத்து ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி குண்டுதாக்குதலை மேற்கொள்வதற்கு 16வயது இளைஞன் திட்டமிட்டமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலிய எதிர்கட்சி தலைவர்பீட்டர் டட்டனை  இலக்குவைத்து குண்டு தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பீட்டர் டட்டனை இலக்குவைத்து குண்டுதாக்குதலை மேற்கொள்வதற்காக குண்டு தயாரிப்பதற்கான பொருட்களை கொள்வனவு செய்த குற்றச்சாட்டின் கீழ் 16 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியன் செய்தி வெளியிட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள 16 வயது இளைஞன் தனியார் பாடாசாலை மாணவன் எனவும் ஆளில்லா விமானத்தை பயன்படுத்த திட்டமிட்டான் எனவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன

அவுஸ்திரேலிய சமஸ்டி மற்றும் குயின்ஸ்லாந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளி;ன் பின்னர் இந்த இளைஞன் ஆகஸ்ட் மாதம் கைதுசெய்யப்பட்;டான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிஸ்பேர்னின் மிகவும் பிரபலமான பாடசாலையில் கல்விகற்ற மாணவன் பிரிஸ்பேர்னில் உள்ள பீட்டர்டட்டனின் வீட்டை தாக்க திட்டமிட்டான்,கடந்த வருடம் மே ஜூலை மாதங்களிற்கு இடைப்பட்ட காலத்தில் இந்த தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டான் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞன் குண்டுகளை தயாரிப்பது குறித்து ஆராய்ந்தான்,வெடிபொருட்களிற்கான பொருட்களை கொள்வனவு செய்தான்,வெப்பவேதியல் எதிர்வினைகளை சோதித்தான்,வீட்டில்தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களை சோதித்தான் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய எதிர்கட்சி தலைவர் தனது சிந்தனைகள் எப்போதும் தனது குடும்பத்தவர்கள் குறித்தே உள்ளாதாக தெரிவித்துள்ளார்.