உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும் சிலர் மட்டுமே அழியாப்புகழ் பெற்றவர்களாக இருப்பார்கள். அப்படி அழியாப்புகழ் பெற்ற தீர்க்கதரிசிகளில் ஒருவர்தான் பாபா வாங்கா.
பல்கேரியாவைச் சேர்ந்த கண் தெரியாத ஆன்மீகவாதியான பாபா வாங்கா, எதிர்காலத்தைப் பற்றிய அவருடைய விசித்திரமான மற்றும் மர்மமான கணிப்புகளுக்குப் புகழ்பெற்றவர்.
அவரது துல்லியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் தீர்க்கதரிசனங்களுக்காக அவர் “பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படுகிறார்.
அவர் 1996 இல் இறந்தாலும், அவரது கணிப்புகள் உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
கடந்த அரை நூற்றாண்டில் அவரது பல கணிப்புகள் உண்மையாகி மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளன, அதனால்தான் பலர் இன்னும் அவரது தீர்க்கதரிசனங்களைப் பின்பற்றுகிறார்கள்.
சமீபத்தில், அவரது பழைய கணிப்புகளில் ஒன்று மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது, இது ஆகஸ்ட் 2025 இல் நடக்கும் என்று அவர் கூறிய “இரட்டை நெருப்பு” என்று அழைக்கப்படும் ஒரு ஆபத்தான எச்சரிக்கையைப் பற்றியது.
பாபா வாங்காவின் தீர்க்கதரிசனத்தின் படி, 2025 ஆகஸ்ட்-ல், ஒரு “இரட்டை நெருப்பு” ஏற்படும் என்று பாபா வாங்கா கூறியிருந்தார், ஒன்று வானத்திலிருந்து வரும், மற்றொன்று பூமியிலிருந்து வரும். இந்த தீர்க்கதரிசனத்தின் முழுமையான அர்த்தம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சிலர் இது காட்டுத் தீயுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
மற்றவர்கள் இது எரிமலை வெடிப்புகளைக் குறிக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஒரு விண்கல் அல்லது சிறுகோள் பூமியைத் தாக்கக்கூடும் என்ற கருத்துகளும் உள்ளன. ஆனால் யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் இந்த தீர்க்கதரிசனம் லகம் முழுவதும் ஆர்வத்தையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
பாபா வாங்கா ஆகஸ்ட் மாதத்திற்கான மற்றொரு ஆபத்தான தீர்க்கதரிசனத்தை வழங்கியுள்ளார். அதுதான் “Unwanted Knowledge”. ஆகஸ்ட் மாதத்தில், மனித இனம் அவர்கள் ஒருபோதும் தெரிந்து கொள்ள கூடாத ஒரு புதுவகையான விஷயத்தை நெருங்கும் என்று அவர் கூறியுள்ளார். இதன் அர்த்தம் என்னவெனில் மக்களை அதிர்ச்சியூட்டும் அல்லது மக்களுக்கு ஆபத்தை ஏற்படத்தக்கூடிய ஒன்று கண்டுபிடிக்கப்படலாம் அல்லது அவர்கள் அறியத் தயாராக இல்லாத ஒன்றைக் கண்டறியலாம்.
மேலும் இந்த உண்மை வெளிவந்தவுடன், அதை மீண்டும் அழிக்கவோ மறைக்கவோ முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். அவர் என்ன சொல்ல வந்தார் என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது, ஆனால் சிலர் இது பயோடெக்னாலஜி அல்லது செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
பாபா வாங்கா விசித்திரமான ஒரு தீர்க்கதரிசனத்தைக் கூறியுள்ளார், “ஒன்றாக மாறிய கை இரண்டாக உடைந்து, ஒவ்வொன்றும் அதன் சொந்த வழியில் செல்லும்.” சிலர் இது நேட்டோ அல்லது ஐரோப்பிய ஒன்றியம் போன்ற குழுக்களில் முறிவு அல்லது கடுமையான கருத்து வேறுபாட்டைக் குறிக்கலாம் என்று நினைக்கிறார்கள். இந்த அமைப்பிலிருந்து சில உறுப்பு நாடுகள் பிரிந்து செல்லலாம் அல்லது வெவ்வேறு திசைகளில் செல்லலாம். மற்றவர்கள் இது ஐரோப்பாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு இடையே வளர்ந்து வரும் பதற்றம் பற்றியதாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.