ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் மட்டக்களப்பு காத்தான்குடியில் இளைஞர்கள் பட்டாசுகளை வெடிக்கச்செய்து வெற்றி ஊர்வலத்திலும் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியை பொது மக்கள் பார்வையிடும் வகையில் காத்தான்குடி குட்வின் சந்தியில் காத்தான்குடி நகர சபையின் அனுமதியுடன் பெரிய திரை (ஸ்கிரீன்) வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியை பெருமளவிலான பொது மக்களும் இளைஞர்களும் கண்டு கழித்தனர்.
இலங்கை வெற்றி பெற்றதையடுத்து இளைஞர்கள் பட்டாசுகளை வெடிக்கச் செய்து தேசிய கொடிகளை ஏந்தியவாறு மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலம் சென்று தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.