ஆசிரியர் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

0
119
மத்திய மாகாணத்தில் உள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கு இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும், மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்கள் இணைந்து நேற்று இந்த முறைப்பாட்டை பதிவு செய்தனர்.வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைய, சகல தகைமைகளையும் பூர்த்தி செய்துள்ள போதிலும் இதுவரை அவர்கள் ஆசிரிய சேவைக்கு உள்வாங்கப்படாமையானது பாரிய மனித உரிமை மீறல் செயற்பாடாகும் என இலங்கை ஆசிரிய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.