ஆதிவாசிகளின் தலைவரை சந்தித்த பிரதமர்

0
85

ரதுகல ஆதிவாசிகளின் தலைவர் சுதா வன்னில எத்தோ பிரதமர் தினேஸ் குணவர்தனவை மொனராகலையில் சந்தித்தார்.

காட்டின் இயற்கை சூழலில் உற்பத்தியாகும் தேன், பழங்கள், மருந்து மூலிகைகள், நன்னீர் மீன் வளர்ப்பு போன்ற வருமான மூலங்கள் சில சட்டங்கள் மற்றும் பல காரணங்களால் முடங்கியுள்ளமை குறித்தும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வசதிகள் இல்லாமை குறித்தும் ஆதிவாசிகளின் தலைவர் பிரதமரிடம் தெரிவித்தார்.

ஊருவரிகே வன்னில எத்தோ தலைமையில் அனைத்து ஆதிவாசி குடியேற்றங்களின் தலைவர்களுடன் பிரதமரை சந்தித்து இந்தப் பிரச்சினைகள் குறித்து விரிவான முறையில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.