ஆப்கானிஸ்தானில் கொட்டித்தீர்த்த கடும் பனியில் சிக்கி 42 பேர் பலியாகி உள்ளனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் சமீப நாட்களில் பனிப்பொழிவு மிக கடுமையாக உள்ளது. நாட்டின் 15 மாகாணங்களிலும் நேற்று முன்தினம் பனியில் சிக்கி 42 பேர் பலியானதுடன், 76 பேர் காயம் அடைந்தனர்கடந்த 20 நாட்களில் ஆப்கன் முழுதும் 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி ஆப்கன் தவிக்கிறது. வேலையின்மை அதிகரித்துள்ளதால், மக்கள் வறுமையின் பிடியில் தள்ளப்பட்டுள்ளனர். உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. இந்நிலையில் கடும் பனிப் பொழிவும் ஆப்கன் மக்களை வாட்டி வதைக்கிறது.