ஆப்கானிஸ்தான் வீரர் குல்புதீன் நைப்பிற்கு ஐ. சி. சி. அபராதம் விதித்துள்ளது.
சிம்பாவேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ரி – 20, 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ரி – 20 ஹராரேவில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின்போது நடுவருக்கு எதிராக பேசியதற்காக ஆப்கானிஸ்தான் வீரர் குல்புதீன் நைப்பிற்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.