ஆராய்ச்சி கப்பல்கள் எரிபொருள் மீள்நிரப்பலில் ஈடுபடுவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை!

0
81

வெளிநாடுகளின் ஆராய்ச்சி கப்பல்கள், இலங்கை துறைமுகங்களில், எரிபொருள் மீள்நிரப்பில் ஈடுபடுவதற்கு, இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கும் என, வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நிலுக்க கதிருகமுவ தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் ஆராய்ச்சி கப்பலுக்கு, இலங்கை அனுமதி வழங்கியமை தொடர்பில், சீன தூதரகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆராய்ச்சிகளில் ஈடுபடும் கப்பல்களுக்கே, இலங்கை தடை விதித்துள்ளது.

ஆராய்ச்சி கப்பல்கள், எரிபொருள் மீள்நிரப்பலில் ஈடுபடுவதற்கு, இலங்கை தடை விதிக்கவில்லை.

ஜேர்மனியின் ஆராய்ச்சி கப்பல், எரிபொருள் மீள் நிரப்புவதற்கே, கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தது. அதனால், அனுமதி வழங்கப்பட்டது.

என, வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நிலுக்க கதிருகமுவ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 14 மாதங்களில், சீனாவின் ஆராய்ச்சி கப்பல்கள், இரண்டு தடவைகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதை தொடர்ந்து, இந்தியாவும் அமெரிக்காவும் வெளியிட்ட கடும் பாதுகாப்பு கரிசனைகள் காரணமாக, இலங்கை அரசாங்கம், ஒரு வருட காலத்திற்கு, ஆராய்ச்சி கப்பல்களுக்கு தடை விதித்துள்ளது.