மட்டக்களப்பு ஆரையம்பதி காங்கேயனோடை மஸ்துர் ரசூல் பள்ளிவாயலில் மீலாதுன் நபி நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
பள்ளிவாயலின் தலைவரும் ஓய்வு பெற்ற அதிபருமான மௌலவி ஏசி.எம்.றிபாய் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் நபியவர்களின் புகழ்கூறும் மௌலூத் மஜ்லிஸ் நடைபெற்றதுடன் விஷேட பிராத்தனை உட்பட ஹழறா மஜ்லிஸ் என்பனவும் இடம் பெற்றன.
நிகழ்வுகளின் இறுதியில் அண்ணதானமும் வழங்கி வைக்கப்பட்டன.இந்த நிகழ்வகளில் உலமாக்கள் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.