ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு !

0
201
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.களனி, களு, கிங், நில்வளா ஆகிய கங்கைகள் மற்றும் மஹா ஓயா அத்தனுகளு ஓயா ஆகிய ஆறுகள் என்பவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.ஆறுகளை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.