அவுஸ்திரேலியா – குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் வீசிய ஆல்ஃபிரட் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க அவுஸ்திரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, புயலில் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு 1000 டொலர்களும், சிறுவர்களுக்கு 400 டொலர்களும் இழப்பீடாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குயின்ஸ்லாந்தின் 11 பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அப்பகுதிகளின் இன்றும் பலத்த மழை மற்றும் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சீரற்ற காலநிலை காரணமாக 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது