ஸ்பெயினில் உள்ள கேனரி தீவுகளின் கடற்கரையில் ஒரு கூன் முதுகு ஆங்லர் மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருங்கடல் மான்ஸ்டர் என்று அழைக்கப்படும் இந்த மீன் நீரின் மேற்பரப்பிலிருந்து 1500 மீட்டர் கீழே சூரியன் எட்டாத ஆழ்கடலில் வாழ்கிறது.
இதுவரை இதன் இனத்தின் இறந்த மீன்கள் மற்றும் ஆழ்கடல் ஆய்வுகளின் போது காணப்பட்ட மீன்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்த மீன் பகல் நேரத்தில் இவ்வாறு காணப்பட்டது சிறப்பு வாய்ந்தது மேலும் கடல் மேற்பரப்பில் உயிருள்ள மீனாகப் புகைப்படக்கருவியில் சிக்கிய முதல் ஆங்லர்பிஷ் இது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.