ஆஷ்விட்ஸ் ஆண்டு விழா: உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கான அழைப்புக்கு போலந்து மறுப்பு!

0
142

நவீனகால போலந்தில் முன்னாள் ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் நாஜி மரண முகாமின் விடுதலையைக் குறிக்கும் விழாவிற்கு முதன்முறையாக ரஷ்ய பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை.

ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் உள்ள முகாம் சோவியத் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டதால்இ ரஷ்யா வழக்கமாக நிகழ்வில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.

ஆனால்இ இந்த ஆண்டுஇ உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்துஇ ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் அருங்காட்சியகம் ரஷ்ய அதிகாரிகளை அழைக்க மறுத்தது மற்றும் அதன் இயக்குனர் உக்ரைன் போரை ஹோலோகாஸ்டின் பயங்கரத்துடன் ஒப்பிட்டார்.

இதற்கு பதிலடியாகஇ இந்த அருங்காட்சியகம் வரலாற்றை மீண்டும் எழுத முயற்சிப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியது.

நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த நிகழ்வில்இ அருங்காட்சியக இயக்குனர் பியோட்டர் சைவின்ஸ்கிஇ ஆஷ்விட்ஸ் நாஜி மெகலோமேனியாவால் உருவாக்கப்பட்டது என்றும் அதேபோன்ற நோய்வாய்ப்பட்ட மெகலோமேனியா மற்றும் அதிகாரத்திற்கான இதே போன்ற மோகம் ரஷ்யாவின் மரியுபோல் மற்றும் டோனெட்ஸ்கின் அழிவுக்கு உந்தியது எனவும் குறிப்பிட்டார்.

முகாமில் இருந்து தப்பியவர்கள் உட்பட பார்வையாளர்களிடம் பேசிய அவர்இ மீண்டும் ஐரோப்பாவில் அப்பாவி மக்கள் பெருமளவில் கொல்லப்படுகிறார்கள். ரஷ்யாஇ உக்ரைனைக் கைப்பற்ற முடியாமல்இ அதை அழிக்க முடிவு செய்துள்ளது என்று எச்சரித்தார்.

இந்த முடிவுக்கு பதிலளித்த ரஷ்யாஇ ஆஷ்விட்ஸை விடுவித்த சோவியத் வீரர்களை மறக்க முடியாது என்று கூறியது.

‘நமது ஐரோப்பிய பங்காளிகள் அல்லாதவர்கள் வரலாற்றை புதிய வழியில் எழுத முயற்சித்தாலும்இ சோவியத் மாவீரர்களின்- விடுதலையாளர்களின் நினைவையும் நாசிசத்தின் பயங்கரத்தையும் அழிக்க முடியாது’ என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா சுட்டிக்காட்டினார்.

ஆஷ்விட்ஸ் உயிர் பிழைத்தவர்களும் நிகழ்வில் உக்ரைனில் நடந்த போரின் வீழ்ச்சி குறித்து தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினர்.