இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டிகளுக்கான அணியின் முழு நேர பயிற்றுவிப்பாளராக மாறுவதற்கு மார்க்கஸ் ட்ரெஸ்கொத்திக் விருப்பம் தெரிவித்துள்ளார். அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக செயற்படுகிறார்.
இந்நிலையில் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணிக்கான முழுநேர பயிற்றுவிப்பாளராக மாற விரும்புவதாக அவர் கூறியுள்ளார். எனினும் இங்கிலாந்து கிரக்கெட் சபை இதுகுறித்து பதில் எதுவும் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.