இங்கிலாந்து மன்னர் சாள்ஸின் முடிசூட்டு விழா 2023இல்.

0
193

இங்கிலாந்து மன்னர் சாள்ஸின் முடிசூட்டு விழாவிற்கான திகதியை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் நீண்ட காலம் இராணியாக இருந்த 2ம் எலிசபெத் கடந்த மாதம் 8ஆம் திகதி தனது 96வது வயதில் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து 2 நாட்களுக்குப் பின் அவரது மகன் சாள்ஸ் இங்கிலாந்தின் புதிய மன்னரானார். மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படும் இவர் கடந்த மாதம் அரியணை ஏறினார். இந்த சூழலில் மூன்றாம் சாள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச குடும்பம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘6 மே 2023 சனிக்கிழமையன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் எங்கள் மாட்சிமை மன்னரின் முடிசூட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் எங்கள் மாட்சிமை வாய்ந்த மன்னர் 3ம் சாள்ஸ், இராணியுடன் முடிசூட்டப்படுவார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.