நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.
இன்றையதினம் 3வது நாளாகஇ 2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜட் மீது விவாதம் இடம்பெறுகின்றது.
இடைக்கால பட்ஜட் கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பட்ஜட் மீதான விவாதம் இன்றைய தினம் மூன்றாவது நாளாக இடம்பெற்றுவருகிறது.
இன்று மாலை விவாதம் நிறைவடைந்ததை அடுத்து பட்ஜட் மீதான வாக்கெடுப்பு நடடைபெறவுள்ளது.