இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள 50 வயது பெண்!

0
226

குழந்தைகள் அணியும் உடைப்போல், அணியும் 50 வயது பெண் ஒருவர் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
என்ன தான் பெரியர்வர்களாக இருந்தாலும், குழந்தை தனமான செய்கைகள் ஒவ்வொருவரிடமும் இருக்கும். அதற்கு காரணம் மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என தெரியாது.
அந்த வகையில், 50 வயது பெண் ஒருவர் தான் இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளார். இவர் தன் வாழ்வை கேர் ப்ரீ ஆக வாழ்ந்து வருகிறார்.
சீனாவின் ஷாங்காய் நகரை சேர்ந்த 50 வயதுடைய இந்த பெண் நாம் சிறுவயதில் பார்த்த டிஸ்னி கார்ட்டூன்களில் வரும் கதாபாத்திரங்களை போல தான் உடையணிகிறார்.
ஆசைக்கா ஒரு நாள் அணிகிறார் என்று பார்த்தால், தினமுமே டிஸ்னி பிரின்செஸ் போல தான் உடையணிகிறார். எப்போது, எங்கு சென்றாலும், இவர் டிஸ்னி உடையில் தான் செல்கிறார்.
இவருடைய, தினசரி அலங்காரத்தில், ஒரு கவுன், தலையில் கிரீடம் போல அணியும் டியாரா எனப்படும் அணிகலன், கழுத்தில் அந்த கவுனுக்கு ஏற்றவாறு ஒரு நெக்லஸ், கையில் ஒரு ஹேண்ட் பேக். யார் இவரைப்பற்றி என்ன சொன்னாலும் கவலைப்படுவதில்லை.