இணையவழி மோசடி- கனடிய மக்களுக்கு எச்சரிக்கை?

0
142

கனடாவில் பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி மோசடிகளில் ஈடுபடும் கும்பல்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிறிஸ்மஸ் மரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக எட்மோண்டன் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கூகுளில் பணம் செலுத்திய போதிலும் மரம் கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கிறிஸ்மஸ் மரம் கொள்வனவு செய்ய மேற்கொண்ட முயற்சியின் ஊடாக இந்த பெண் 1500 டொலர்களை இழந்துள்ளார்.கூகுள் தேடுதளத்தில் கிறிஸ்மஸ் மரம் குறித்து தேடிய போது பட்டியலான முதலாவது இணையதளம் என்ற காரணத்தினால் இந்த இணையதளம் நம்பகமானது என கருதி பணப்பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளார்.