இத்தாலி கடற்பகுதியில் படகு மூழ்கிய விபத்தில் சிக்கி 59 அகதிகள் உயிரிழந்து்ளனர்.
வறுமை மற்றும் உள்நாட்டு போர் உள்ளிட்ட காரணங்களால் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக சென்று வருகின்றனர்.
கடலில் ஆபத்தான முறையில் செல்லும் அவர்கள் அடிக்கடி விபத்துகளையும் சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் 100-க்கும் மேற்பட்ட ஆபிரிக்க அகதிகளுடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்று இத்தாலியின் கலாபிரியா கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் மூழ்கியது.
இதில் 59-க்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அதில் 12 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். பலர் மாயமாகி உள்ளனர். இதுவரை 59 உடல்களை மீட்டுள்ள இத்தாலி கடலோர காவல் படையினர், சம்பவ இடத்தில் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தாலி கடற்பகுதியில் படகு விபத்தில் 59-க்கு மேற்பட்ட அகதிகள் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.