இந்தியாவின், ஆந்திராவில் மருந்து நிறுவனத்தில் வெடிப்பு!

0
44

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 33 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் மருந்து நிறுவனத்தில் நேற்று மதியம் வெடிப்புச் சம்பவம் பதிவானது.

குறித்த மருந்து நிறுவனத்தில் 300 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்துவரும் நிலையில் மதிய போசனத்திற்காக பணியாளர்கள் சென்றிருந்ததால் பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மின் ஒழக்கு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனிடையே சம்பவ இடத்திற்கு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பில் உயர்மட்ட விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.