இந்தியாவின் 76வது குடியரசு தினமான இன்றைய தினம், யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் இன்று காலை இந்திய தேசியக் கொடியேற்றி குடியரசு தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை எற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது.
கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் யாழ். இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், பணியாளர்கள், இந்திய மற்றும் இலங்கை மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.