இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்: முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தல்

0
54

இந்தியாவின் மும்பையில் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக அந்த நாட்டு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவல்களை அடுத்து மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்படி, வழிபாட்டு ஸ்தலங்கள், போக்குவரத்து நிலையங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அத்துடன், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் ஒத்திகை பாதுகாப்பு பயிற்சிகளை நடத்துமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.