இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் ஆடைகளின் ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து மோடியிடம் பேச்சு!

0
9

அமெரிக்க வரிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை ஆடைகளின் ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடியதாக பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார். 

‘புதிய அமெரிக்க வரிக் கொள்கை இலங்கையை எவ்வாறு பாதிக்கும்’ என்பதை விளக்குவதற்காக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அதன்படி, இது தொடர்பான திட்டத்தை பரிசீலிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.