இந்தியாவுக்கு தப்பிச்சென்ற குற்றவாளி கைது!

0
4

நீதிமன்ற சட்ட நடவடிக்கையை புறக்கணித்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் நேற்று (12) இரவு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

குறித்த குற்றவாளியான மண்டலகல போம்புலகே சுமித் பிரியந்த என்ற நபர், கப்பம் பெறுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக தேடப்படும் சந்தேக நபர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.