இந்தியா- நீலகிரி மாவட்டம் உதகை அருகே மஞ்சனக்கொரை பகுதியிலுள்ள தனியார் பள்ளியின் அருகில் தடுப்புச் சுவர் அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். பணியில் ஈடுபட்ட 53 வயதுடைய சேட் மற்றும் 28 வயதினையுடைய வேலு ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதோடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.