2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 45 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன், இந்தியா மற்றும் நெதர்லாந்து ஆகிய 02 அணிகளும் ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் 02 முறை மோதியுள்ளன.
குறித்த 02 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.