சர்வதேச கிரிக்கட் சம்மேளத்தின் செம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் (Champions Trophy) பங்கேற்க இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால்இ பாகிஸ்தான் அணி தொடரையே புறக்கணிக்கும் என்று முன்னாள் வீரர் ரசித் லத்தீஃப் (Rashid Latif) தெரிவித்துள்ளார்.
எனவே சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் இந்த விடயத்தில் தலையிட்டு பாகிஸ்தான் கிரிக்கட் நிர்வாகத்தை சமாதானம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.ஐசிசி செம்பியன்ஸ் கிண்ணத் தொடர் அடுத்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் பாகிஸ்தானில் நடத்தப்படவுள்ளது.இதற்கான போட்டி அட்டவணைகள் விரைவில் வெளியிடப்படவுள்ளன. 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐசிசி செம்பியன்ஸ் கிண்ணம் நடக்கவுள்ளதால் இரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர்.
எனினும் அரசியல் காரணங்களை முன்வைத்து செம்பியன்ஸ் கிண்ணத்துக்காக பாகிஸ்தானுக்கு செல்லப்போவதில்லை என்று இந்தியா இன்று அறிவித்துள்ளது.இதனையடுத்து இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை வேறு நாடுகளில் கலப்பு முறையில் நடத்துவது குறித்து சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் இன்னும் அறிவிக்கவில்லை.இந்த நிலையிலேயே லத்தீப்பின் கருத்து வெளியாகியுள்ளது சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் 2024 முதல் 2031 வரையிலான தொடர்களில் பங்கேற்பதாக அனைத்து கிரிக்கட் அணிகளும் கையொப்பமிட்டுள்ளன.
எனவே இருதரப்பு கிரிக்கட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று எந்த அணிகளும் கூறமுடியும். எனினும் சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் தொடர்களை புறக்கணிக்க முடியாது
இந்த சூழ்நிலையில்இ ஒருவேளை இந்திய அணி வரவில்லை என்றால்இ பாகிஸ்தான் இந்த தொடரை புறக்கணிக்கும் முடிவை எடுக்கலாம் என்று லத்தீப் தெரிவித்துள்ளார்.