இந்தியா – மத்திய பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 11 பேர் உயிரிழப்பு

0
98

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 க்கும் மேற்பட்டவர்கள்; காயமடைந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

அனர்த்தத்தின்போது அதிகளவானவர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் அவர்களை மீட்பதற்காக 50 க்கும் மேற்பட்ட அம்பியுலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதுடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.

அத்துடன் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சைகள் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியின் 15 கிலோமீட்டர் சுற்றளவுக்கு வெடிப்பின் அதிர்வு உணரப்பட்டள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே குறித்த பட்டாசுத் தொழிற்சாலை அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்தமை தெரிவியவந்துள்ளது.