28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கண்டி மாவட்டத்திற்கு விஜயம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கண்டி மாவட்டத்திற்கு விஜயம் செய்து, பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டார்.

கண்டி மாவட்டத்திற்கு சென்ற உயர்ஸ்தானிகரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வரவேற்றார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில், மத்திய மாகாண ஆயுர் வேத மருத்துவத் திணைக்களத்தின் வழிகாட்டலில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாமை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, கண்டி ஹந்தான ஸ்ரீ வாணி வித்தியாலய மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

அங்கு நிலவும் குடி நீர் பிரச்சினை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு உடன் தீர்வு வழங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டதுடன், அதனை செயற்படுத்த, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதன் பின்னர், கண்டி ஹந்தானை மேற் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, வீட்டு திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த மக்கள், மேலும் வீடமைப்புத் திட்டங்களை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அத்துடன், கண்டி கித்துள்முல்ல பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்திற்கான நில தயார்படுத்தலையும், இந்திய உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார்.

இந்த விஜயங்களில், இந்திய அரசின் அதிகாரிகள், அரச அதிகாரிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர் பாரத் அருள்சாமி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதி பொதுச் செயலாளர் செல்லமுத்து, மாவட்ட தலைவர்கள், தோட்ட தலைவர்கள், அமைப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles