உள்நாட்டு யுத்தம் காரணமாக நாட்டை விட்டு புலம்பெயர்ந்து இந்தியாவில் ஏதிலிகளாக வாழ்கின்ற இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பும் போது அவர்கள் இலங்கையில் நிலையாக வாழ்வதற்குரிய வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது.
இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ .ஜி.எம் ஹேமந்தகுமார தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திரும்புபவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகளான, வசிப்பதற்கான காணி, அடிப்படை ஆவணங்கள், வாழ்வாதாரம், நாடு திரும்பிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு , நிரந்தர வீட்டுத்திட்டம் , சுகாதார வசதிகள் , சமூக ஒருங்கிணைவு போன்றவை மக்களுக்குத் தடையின்றி கிடைப்பதற்குரிய தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.