Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
இந்திய விசா விண்ணப்ப மையத்தின் கண்டி கிளையின் போலி இணையத்தளத்தை பராமரித்து மக்களை மோசடி செய்த இளைஞர் ஒருவர் கண்டி வத்தேகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபரை கைது செய்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், சந்தேகநபருக்குச் சொந்தமான மடிக்கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.பன்விலவில் வசிக்கும் 29 வயதான இவர், ஃபிஷிங் இணையதளத்தை பராமரித்து இந்திய விசா வழங்குவதற்காக தனிநபர்களிடம் பணம் பெற்றுள்ளார்.கணினி குற்றச் சட்டம் மற்றும் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்ததற்காக ஏமாற்றுதல் மற்றும் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.