யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி அணி மோதும் 2022 ஆம் ஆண்டுக்கான விவாதச் சமர் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
இன்றைய அரசியற் சூழலில் தமிழ்த் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்கத் தயாராக வேண்டும், இல்லை என்ற தலைப்பில் சொல்லாடல் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் சொல்லாடல் இன்று மாலை 6.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.