இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்!

0
239

இந்தோனேஷியாவில் 7.0 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 3.25 மணிக்கு இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் டூபன் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை இதுவரை விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.