அம்பாறை மாளிகைக்காடு கிழக்கு சகவாழ்வு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘இனங்களுக்கிடையில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்குவோம்’
என்ற ஒன்று கூடலும், பரிசளிப்பு நிகழ்வும் மாளிகைக்காடு அல் ஹூசைன் வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
சகவாழ்வு சங்கத்தின் செயலாளர் ஆர்.எம். தன்ஸீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், காரைதீவு பிரதேச செயலாளர் ஜெகராஜன், அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளர் யூ.எல்.என்.ஹூதா உமர், அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி ஏ.எம்.எம். மின்ஹாஜ், காரைதீவு அம்மன் ஆலயகுரு ஜீவன்குல சுவாமிகள்,
வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான பயிற்சியாளர் ஐ.எல். காஸிம் கலந்துகொண்டனர்.