இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கு அரசாங்கத்துக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையில் மத்தியஸ்தராக செயற்படப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள, நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், பேச்சுவார்த்தைகளில் வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் காலநிலை விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள தனக்கு காலநிலை மற்றும் சூழல் விவகாரங்கள்
தவிர, வேறு ஆணை இல்லை என்றும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.