தேசிய மின் கட்டமைப்பில் 541 மெகாவொட் மின்சாரத்திற்குத் தட்டுப்பாடு ஏற்படுவதினால் இன்றைய தினம் ஏ.பி.சி. என்ற மூன்று வலயங்களில் தலா இரண்டு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஏனைய வலயங்களில் 3 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
இதற்கமைய ஏ.பி.சி ஆகிய வலயங்களில் பிற்பகல் 4.30 முதல் இரவு 10.30க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.பி.சி தவிர்ந்த ஏனைய வலயங்களில் இதே காலப்பகுதியில் மூன்று மணிநேர மின்சார தடை அமுலாகும்.