இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் பலி!

0
148

தம்புத்தேகம ஏரியாகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் பலியாகினர்.

அத்துடன் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

குருநாகலை பகுதியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த பாரவூர்தியொன்று கடையொன்றிற்கு அருகில் நிறுத்தச் சென்ற போது பின்னால் வந்த வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, பாரவூர்தியில் இருந்த 8 பேர் படுகாயமடைந்த நிலையில், தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில், இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களுமே உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.