இன்று பதவி நீக்கம் தொடர்பான பிரேரணை!

0
26

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குமாறு தெரிவித்து 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகருக்குப் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்தனர். 

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா மா அதிபர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான விசேட குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று விவாதம் இன்றி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.