இன்று முதல் Online நுழைவுச்சீட்டு விநியோகம்!

0
2

கவுடுல்ல தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக நுழைவுச் சீட்டுகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (10) முதல் Online ஊடாக  பெற்றுக்கொள்ள முடியுமென வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்  அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுடுல்ல தேசிய பூங்காவை பார்வையிடுவதற்காக சனிக்கிழமை (09) அன்று நீண்ட வரிசை காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அசௌகரிங்களுக்குள்ளானதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் ஏற்படும் அசௌகரியங்களை குறைத்துக்கொள்ளும் நோக்கில் Online ஊடாக நுழைவுச்சீட்டுகளை விநியோகிக்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.