30 வருட யுத்த நிறைவின் வெற்றிக் கொண்டாட்டத்தின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று திங்கட்கிழமை (19) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள இராணு வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு முன்பாக மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் ஜனாதிபதி உட்பட நாட்டின் பாதுகாப்பு துறைசார் முக்கியஸ்தர்கள், தூதுவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள், யுத்தத்தில் உயிர் தியாகம் செய்த இராணுவத்தினர் மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.