இன முரண்பாடுகளை சில அரசியல் தரப்பினர் தீவிரமாக ஊக்குவித்து வருகின்றனர் – சமன் ரத்னபிரிய

0
101
சில அரசியல் தரப்பினர் தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்காக நாட்டில் இன முரண்பாடுகளை தீவிரமாக ஊக்குவித்து வருவதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க உறவுகளின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சமன் ரத்னப்பிரிய, இதனை தெரிவித்துள்ளார்.
நீண்டகால யுத்தம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் உட்பட கடந்த மூன்று தசாப்தங்களாக குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை நாடு ஏற்கனவே எதிர்கொண்டுள்ளதாகவும் வலியுறுத்தினார்.
இந்த இருண்ட காலகட்டத்திலிருந்து மீளக் கட்டியெழுப்பும் பணியில் இலங்கை ஈடுபட்டுள்ள நிலையில், மீண்டும் இன முரண்பாடுகள் தலைதூக்க வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.