தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குறித்து இந்தப் பத்தியில் முன்னரும் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தேன்.
அவரின் அரசியல் நிலைப்பாடு பலருக்கும் உடன்பாடு இல்லாதது. பலருக்கும் என்று நான் சொல்வது தமிழ்த் தேசிய அரசியலை விரும்புபவர்கள் பற்றியது. ஆனாலும்
அவர் மட்டக்களப்பில் அறுபதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர் என்பதையும் நாம் மறந்துவிடமுடி யாது.
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா பிரிந்து செல்ல முற்பட்டிருக்காவிட்டால் பிள்ளையான் என்ற அந்தப் போராளியும் தொடர்ந்து இயக்கத்தில் இருந்திருப் பார். முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தி
ருக்கும் என்பதை யும் இங்கே எழுதவேண்டும் என்பதல்ல.
ஆனால், சிறுவர் போராளியாக இயக்கத்தில் இணைந்த அவர், அதிலிருந்து வெளியேறி பின்னர் நடந்தவை இங்கே எழுதித்தான் தெரியவேண்டும் என்பதல்ல.
கிழக்கு மாகாண முதலமைச்சராக இவர் இருந்தபோது எப்படி பணியாற்றினார் என்பதையே மேலே சொன்னது போல, இந்தப் பத்தியில் ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.
இப்போது சொல்ல வருவதும் அவர் அண்மையில் ஒரு கூட்டத்தில் தெரிவித்திருந்த விடயங்கள் பற்றியவை தான்.
பாராளுமன்றத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட தேசிய பேரவையில் அவரும் ஓர் உறுப்பினர். பின்னர் அந்த பேரவை இரண்டு உபகுழுக்களை அமைத்திருந்தது வாசகர்
களுக்கு தெரிந்ததுதான். அதில் ஒன்று சம்பிக்க ரணவக்க தலைமையிலான உபகுழு. பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வு காண்பதற்கான யோசனைகளை
தயாரிப்பதற்கான அந்த உபகுழுவில் சந்திரகாந்தனும் ஓர் உறுப்பினர். பாராளுமன்றத்தில் இருக்கும் தமிழ் பாராளு மன்ற உறுப்பினர்களில் இந்த ஊர்க்குருவி அறிந்தவரையில், அவரே மிகக்குறைந்த கல்வித் தகைமையை கொண்டவர்.
அதற்காக அவரால் கல்வி கற்றிருக்க முடியாது என்பதல்ல. சிறுவயதிலேயே இனத்துக்காக அனைத்தையும் துறந்து தன் வாழ்க்கையை தொலைத்தவர்களில் அவரும் ஒருவர்.
அண்மையில், சம்பிக்க ரணவக்கவை சந்திக்கும் சந்தர்ப் பம் இந்த ஊர்க்குருவிக்கு கிடைத்தது. அப்போது அவர் தெரிவித்த கருத்து ஒன்றே இந்தப் பத்தியை எழுதவேண்டும் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தியது.
தமது உபகுழுக்களின் கூட்டத்தில் கலந்துகொள்பவர் களில் மிகவும் கல்வி அறிவு குறைந்தவர் பிள்ளையான்தான்.
ஆனால், அவர் ஒருவர்தான் மிக முக்கியமான – மிகத் தேவையான – கேள்விகளைக் கேட்கிறார். அங்கிருப்பவர் களை எல்லாம் வெட்கப்படும் வகையில் இவரின் கேள்வி
கள் அமைந்திருக்கின்றன. பல தடவைகள் அவர் என்னை ஆச்சரியப்பட வைக்கிறார் என்றார் சம்பிக்க.
மாகாண முதலமைச்சராக இருந்தபோது தன்னோடு மிகத் திறமையானவர்களை வைத்திருந்தார். அவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்ததால் சிறப்பான முதல
மைச்சராக அவரால் பணியாற்ற முடிந்தது என்றுதான் அறிந்திருக்கிறேன்.
ஆனால், அவரே தனி ஆளாகக் கலந்துகொள்ளும் கூட் டத்தில் முன்வைக்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான கேள்விகளை அவர் கேட்டு திருப்திப்பட்
டுக் கொள்வதாக அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது.
புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி – வெளியேறி என்றால் அவர்களால் துரோகி ஆக்கப்பட்டு – அவர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசியல் செய்யத் தொடங்கிய
பிள்ளையான் என்ற சந்திரகாந்தன், பின்னர் தான் அமைத்த அரசியல் கட்சிக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்று பெயர் வைத்தபோது ஒரு வகை நெருடலை தந்தது.
இவர் எதற்காக புலிகளின் பெயரை வைக்கிறார் என்பதை புரிந்துகொள்ளவும் அப்போது முடியவில்லை.
ஆனால், அதன் அர்த்தம் இப்போதுதான் புரிந்துகொள் ளக்கூடியதாக இருந்தது.
என்னதான் இருந்தாலும் தான் அரசியல் கற்றது அந்த இயக்கத்தில் என்பதால்தான் அதன் பெயரை மறக்கவில் லையோ என்னவோ.
சிறுவர் போராளியாக இயக்கத்தில் இணைந்த அவரால் இன்று பலரும் வியக்கத்தக்க வகையில் கேள்வி கேட்கமுடி கின்றது என்றால் அவர் வளர்ந்த இடம் அவருக்கு
ஏற்படுத்திக் கொடுத்தது என்பதை மறக்காததால்தான் அப்படியொரு பெயரை கட்சிக்கு வைத்தாரோ என்னவோ?
- ஊர்க்குருவ