இப்படியும் நடக்கிறது…!

0
204

லண்டனிலிருந்து நண்பர் ஒருவர் ஒரு நகைச்சுவை துணுக்கு ஒன்றை ‘வட்ஸ்அப்’ மூலம் அனுப்பியிருந்தார்.
இப்போதெல்லாம் இந்த ஊர்க்குருவிக்கு இவ்வாறு குட்டிக்கதைகள் அல்லது நகைச்சுவை துணுக்குகளைத் தான் நண்பர்கள் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தப் பத்தியில் இடைக்கிடையே இதுபோன்ற கதைகளை எழுதுவதால், அப்படி எழுதாமல் விட்டு விட்டால் ஊர்க்குருவியிடம் கதைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாக நண்பர்கள் நினைக்கின்றார்களோ
தெரியவில்லை.
நண்பர் அனுப்பிய துணுக்கை இனி பார்ப்போம்.
ஓர் இளம் பெண், மனோதத்துவ டாக்டர் ஒருவரை பார்க்க வந்திருந்தார்.
அவரிடம், அவர் மனநிலையை சோதித்துப் பார்ப்பதற் காக டாக்டர் கேட்டார்,
“நேற்றிரவு என்ன கனவு கண்டீர்கள்?’’
“நான் ஆடை ஏதும் இல்லாமல் வெறும் தொப்பியுடன் கடைத் தெருவில் நடந்து செல்வதாகக் கனவு கண்டேன்’’ என்றார் அந்த இளம்பெண்.
“உங்களுக்கு வெட்கமாக இருந்ததா?’’ என்றார் டாக்டர்.
அதற்கு அந்த இளம்பெண்,
“ஆமாம். ரொம்ப வெட்கமாக இருந்தது. ஏனெனில், நான் அணிந்திருந்தது கிழிந்து போன பழைய தொப்பி. அதைப் பார்ப்பவர்கள் என்னைப் பற்றி என்ன
நினைப்பார்கள்?’’
இதுதான் அந்தத் துணுக்கு.
எதற்காக அந்த நண்பர் இந்தக் கதையை அனுப்பினார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் ஏதோ இந்த ஊர்க்குருவியைத்தான் கிண்டல் செய்கிறார் என்று நினைத்தவனாக யோசித்துப்பார்க்கையில் எதுவும்
புரியவில்லை.
வேறு வழியின்றி அவரிடமே கேட்டுவிடுவது என்று அவரை அழைத்தேன். அப்போது அங்கு அதிகாலை.
“ஒன்றும் இல்லை, அந்தச் செய்தியை ‘ஈழநாடு’இல் படித்தபோது, நிர்வாணமாக போவதைவிட, கிழிந்த தொப்பி போட்டிருப்பதை நினைத்தே வெட்கப்பட்ட அந்த பெண்ணைப்போல, அவர்களும் வெட்கப்பட்டுக் கொண்டுதான் அனுப்பியிருப்பார்கள்’’ என்று விளக்கம ளித்தார் நண்பர்.
கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியது சாதாரணமான விடயம்தான். அவர்கள் நமது பிரச்னைகள் தொடர்பாக பல தடவைகள் தமிழக அரசியல்வாதிகளை அணுகியிருக்கிறார்கள். ஆனால், உலகத் தமிழர் பேரவை
யும் இப்போது கூட்டாக இணைந்து அனுப்பியிருப்பதை பார்க்கின்றபோது எனக்கு அப்படித்தான் தோன்றியது என்றார்.
அந்தக் கடித்தில், 1983ஆம் ஆண்டுக் கலவரத்திற்குப் பின்னர் தமிழ் மக்களின் உயிர்களையும்,
சொத்துக்களையும், மற்றும் அரசியல் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு மறைந்த கலைஞர் மு. கருணாநிதி அவர் கள் வழங்கிய தலைமைத்துவத்தினை நாம் என்றும் நன்றி யோடு நினைவில் வைத்திருப்போம் என்ற அவரது வரிகள்
தான் தனக்கு அப்படி எண்ணத் தோhன்றியது என்றார் நண்பர்.
விடுதலைப் புலிகள் முல்லைத்தீவில் ஆயுதங்களை மௌனித்த பின்னர் தொடர்ச்சியாக கலைஞர்மீது இவர் கள் தெரிவித்த கருத்துக்களை இவ்வளவு இலகுவாக மறந்து போனதை நினைத்தபோது அப்படித்தான் எண்ணத்
தோன்றியது என்றார் அவர்.
எதற்காக இப்போது இவர்கள் இருவரும் இப்படியொரு கடிதத்தை அனுப்பியிருப்பார்கள் என்று நினைக்கிறீர் என்று என்னிடமே கேட்டார் அவர். இப்படி கடிதம் அனுப்புவதற்கும் காரணம் கண்டுபிடிக்கவேண்டுமா?
நல்ல விடயம்தானே, என்றேன் நான்.
நல்ல விசயம், நல்ல விசயத்திற்காக செய்யப்பட்டால் நல்லதுதான் என்றார் அவர். மோடி இலங்கை வரவிருக்கி றார். அந்த விஜயத்தின்போது தமிழர் விடயத்தில் ஓர் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மோடிக்கு சிம்ம சொற்பனமாக திகழும் தலைவர் ஒருவரை வாழ்த்தி, போற்றி, புகழ்வது அவருக்கு மகிழ்ச்சியையா உண்டாக்கும்? இதுகூடவா நமது தலை
வர்களுக்கு தெரியாது? இதுகும் நமது அரசியல் சாணக்கியம் என்றால் தலையை எங்குகொண்டுபோய் முட்டிக்கொள்வது என்று கூறிவிட்டு, தொடர்பை
துண்டித்தார் அவர்.

  • ஊர்க்குருவி