இப்படியும் நடக்கிறது

0
129

‘இப்படியும் நடக்கிறது’ என்ற இந்தப் பத்தி எழுதத் தொடங்கி பல வருடங்கள் கடந்துவிட்டன. இப்போது முதல் தடவையாக அதில் எழுதப்பட்ட விடயம் தொடர்பாக ஒருவரிட மிருந்து மறுப்புக் கடிதம் கிடைத்திருக்கின்றது.

இப்படியொரு நடவ டிக்கை எடுக்கப்படவிருப் பது குறித்து ஏற்கனவே ஒரு டிஜிற்றல் பத்திரிகை எழுதி யிருந்தது பற்றி, நண்பர்கள் முன்னதாகவே தெரிவித்தி ருந்தனர். அதனால் அது எதிர்பார்க்கப்பட்டது தான்.

ஜனாதிபதி சட்டத்தரணி யும் பாராளுமன்ற உறுப்பி னருமான எம். ஏ. சுமந்திரன் அவர்களிடமிருந்து வந்த அந்தக் கடிதம், தன்னைப் பற்றி எழுதப்பட்ட தவறான செய்திக்காக உரிய முக்கியத் துவம் கொடுக்கப்பட்டு திருத்தம் செய்து பிரசுரிக் கப்பட வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. சுமந் திரனிடம் இருந்து கிடைத்த அந்தக் கடிதத்தை இங்கே இந்தப் பக்கத்திலேயே தனி யாக பிரசுரித்திருக்கின் றோம்.

அதனைப் படித்துவிட்டு பின்னதாக இந்தப் பத்தி யைப் படிப்பது பொருத்த மாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

சுமந்திரன் அவர்கள் குறிப் பிடுவதுபோல, அது தவ றான அறிக்கையிடுதல் என்பதை ஏற்றுக்கொள்கின் றோம். ஆனால், அவர் குறிப் பிடுவதுபோல, தவறானதும் பொய்யானதுமான அறிக்கை யிடுதல் என்பதைத்தான் புரிந்துகொள்ள முடிய வில்லை.

தவறு என்பது தன்னை அறியாமல் நிகழ்வது – எதிர் பாராமல் இடம்பெறுவது. ஆனால், பொய் என்பது தெரிந்துகொண்டு சொல் வது. ஆனால், பொய் பேசு தல்கூட ஒரு நிலையில் வாய்மையாகக் கருதப்படும் என்கிறார் வள்ளுவர். ஒருவன் பொய் பேசுவதால் பிறருக்கு நன்மை விளையுமானால் அது பொய்யாகாது. அது வும் வாய்மையாகக் கருதப் படும் என்று வள்ளுவர் குறிப் பிடுகிறார். சிலவேளை நாங் கள் அப்படி தவறாக எழுதி யது பிறருக்கு நன்மை விளை யும் என்று சுமந்திரன் கருதிய தால்தான் அதனை பொய் என்றாரோ தெரிய வில்லை.

அது தவறான அறிக்கை யிடுதல் என்பதை ஏற்றுக் கொள்கின்ற போதிலும் அது பொய்யான அறிக்கையிடுதல் அல்ல என்பதையும் – அதா வது அது பொய்யான செய்தி என்று தெரிந்து கொண்டு அதனை பதிவிட வில்லை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்பு கின்றோம்.

வழக்கு தாமதமாவதற்கு தான்தான் காரணம் என்று பொய்யான செய்தியைப் பரப்பும் தீயநோக்கோடு அது பிரசுரிக்கப்பட்டிருக் கின்றது என்ற முடிவுக்கும் அவர் வந்திருக்கிறார். அப் படி எந்தவொரு தீயநோக் கமும் இந்தப் பத்தியை எழு தும்போது எமக்கு இருக்க வில்லை என்பதை இங்கே பதிவுசெய்ய விரும்புகின் றோம்.

தமிழ் அரசு கட்சிக்கு எதிரான வழக்கில் அன்றைய தினம் கட்சியின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் வழக்கில் வழக்காளி தரப்பில் குற்றம்சாட்டப் பட்டது போல கட்சி யாப்பில் சில விதிகள் மீறப்பட்டிருந்ததை ஏற்றுக்கொள்வதாக மன் றுக்கு தெரிவித்திருந்தனர்.

வழக்கில் ஏழு எதிராளி களில் ஆறாம் எதிராளியான சுமந்திரன் அன்றைய தினம் வருகை தராததால், அவரின் கருத்தை அறிவதற்காக வழக்கை வேறு ஒரு திகதிக்கு மன்று ஒத்திவைக்கப் போகும்போது 3ஆம் எதிராளி சத்திய லிங்கம், 5ஆம் எதிராளி குல நாயகம் ஆகியோர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத் தரணி சுமந்திரன் அவர்களின் கனிஷ்ட சட்டத்தரணியாக வும் பணியாற்றுபவர் என்ப தால், அவரிடம் சுமந்திர னுக்கு வசதியான திகதியைப் பெறுவதற்கு கட்சி சார்பில் ஆஜராகியிருந்த சட்டத் தரணி முயன்றார். அவரிடம் பெறப்பட்ட திகதியையே நீதிமன்று அடுத்த தவணைக் காகத் திகதியிட்டது.

‘அவ்வாறு அவரிடம் பெறாமல் ஒரு திகதியை நீதி மன்று நிர்ணயித்திருந்தால், அந்தத் தினத்தில் சுமந்திர னுக்கு வேறு நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால் அவ ரால் பிரசன்னமாக முடியா மல் போகலாம் என்பதற்கா கவே சுமந்திரனின் கனிஷ்ட சட்டத்தரணியிடமிருந்து அவருக்கு வசதியான திகதி யைப் பெற முயற்சி செய் யப்பட்டதாக கட்சி சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட் டத்தரணி கே. வி. தவராசா இந்த ஊர்க்குருவியிடம் கூறினார்.

நீதிமன்ற செய்திகளை அறிக்கையிடுகின்ற ஊடக வியலாளர்கள் வழக்கமாக நீதிமன்ற பதிவேடுகளை சரிபார்த்தே செய்திகளை சேகரிப்பது வழக்கமானது. ஆனால், அந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி அதனை விரைவாக வழங்கும் அவசரத்தில் செய்த இந்தத் தவறு சுமந்திரனுக்கு ஏற் படுத்திய அசௌகரியங்களுக் காக வருந்துகின்றோம்.

  • ஊர்க்குருவி.