ஜனாதிபதித் தேர்தலில் யார் யாரெல்லாம் போட்டியிடுவார் கள் என்பது இன்னமும் தெரிய வில்லை என்றாலும் இன்றைய நிலையில் மூவர் போட்டியிட இருக்கின்றனரென அறிவித்து அதற்கான பணிகளை தொடக்கி விட்டனர்.
தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார போட்டியிடுவது மறுபேச்சுக்கு இடமின்றி நிரூபணமாகிவிட்டது. சஜித் பிரேமதாஸ தான் போட்டியிடுவது பற்றி அறி வித்து விட்டபோதிலும் அவரை யும் ரணில் விக்கிரமசிங்கவை யும் ஓரணியில் கொண்டுவர சில வெளி சக்திகளும் சஜித்தின் கட்சியிலுள்ள சில மூத்த தலை வர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். இன்றைய நிலையில், ரணில் விக்கிரமசிங்க வைவிட அதிக மக்கள் செல் வாக்கை தானே கொண்டிருக் கிறார் எனவும் எதற்காகத் தான் விட்டுக் கொடுக்கவேண்டும் என்றும் சஜித் வாதிட்டு வருகிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டா ரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால், இன்றைய நிலைமை மிகவிரைவில் மாறலாம் என்று எதிர்பார்த்திருக்கும் ஜனாதிபதி ரணிலோ, சஜித்தை தன்னோடு சேர்ப்பதைவிட அவரின் கட்சியை இரண்டாக்கி அங்கிருக்கும் முக்கிய தலைகளை ‘தூக்குவதிலேயே’ குறியாக இருக்கிறார். சஜித்தை பலவீனப்படுத்தினால் அவர் வேறுவழியின்றி வருவார் என்பது ரணிலின் கணக்காக இருக்கலாம். ரணிலின் கணக்குப் பிழைத்து மூவரும் போட்டியிடுகின்ற நிலை வந்தால், தான் வெற்றி பெறுவதற்கு சாதகமான நிலை இருக்காது என்று ரணில் கணக் குப்போடுவாரெனில் அவர் கடைசி நேரத்தில் போட்டியிலி ருந்து விலகுவார் என்று அவரை நன்கு அறிந்தவர்கள் இப்போ தும் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
அப்படியொருநிலை வந் தால், தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பலமான ஒரு பொது வேட்பாளரை நிறுத்தவேண்டிய நிலை வரலாம் என்று இப்போ தும் சிலர் நம்பிக்கொண்டிருககின்றனர்.
அவ்வாறு நம்புப வர்களில் முக்கியமானவர்களில் பாட்டாலி சம்பிக்க ரணவக்க ஒருவர். அதனால்தான் அவர் இப்போதும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து கேட்டால் பொதுவேட்பாளராக் களம் இறங்கத்தான் தயாராக இருக்கிறேன் என்று கூறிக் கொண்டிருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் செல்வாக்கு முக்கிய இடத்தை வகிப்பதற்குப் பதி லாக, வேட்பாளரின் தனிப் பட்ட ஆளுமையும் முக்கிய பங்கை வகிக்கும் என்பதால், ‘ரணிலா? சஜித்தா? அநுராவா? இந்த நாடு இன்று இருக்கும் நிலையில் நாட்டை முன் னோக்கி கொண்டுசெல்லக் கூடியவர்’ என்று ஒரு வாக்கா ளன் தனக்குள் கேள்வி கேட் டால் அதில் யார் முதலிடத்தில் இருப்பார் என்பது ஆராய்ச்சிக் குரியதல்ல.
அதனால்தான் மூன்று வேட்பாளர்கள் களத்தில் நின்றாலும் அந்தக் கேள்விக்கு விடை கிடைக்கின்றபோது மற்றைய இருவரிலும் பார்க்க ஒரு வாக்கென்றாலும் தான் அதிகமாக எடுப்பேன் என்று ரணில் நம்புகிறார் என்று தெரி கின்றது. ஆனால், அப்படியொரு ‘றிஸ்க்’கை எடுக்க சிலர் விரும்ப வில்லை என்று தெரிகின்றது. அதாவது அநுரகுமார ஆட் சிக்கு வந்துவிடக்கூடாது என்ப தில் அக்கறையுள்ள வெளி நாட்டு சக்திகள் மாத்திரமன்றி, உள்நாட்டிலுள்ள ‘கோர்ப்ரேற்’ சமூகமும் விரும்பவில்லை என்று தெரிகின்றது. ரணில் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகினால், சஜித்தா? அநுரகுமாரவா? என்ற கேள்வி வாக்காளர் மத்தியில் ஏற்பட்டால் அதில், அநுரவே முன்னுக்கு நிற்பார் என்பதால் அப்படியொரு நிலைமை ஏற் பட்டுவிடக்கூடாது என்பதில் பலரும் மிகுந்த அக்கறை காட்டி வருகின்றனராம்.
இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்ட தெற்கு ஊடகர் சிரித் துக் கொண்டே சொன்னார், ‘அப்படியொரு போட்டி வந்து அதில் அநுர வெற்றிபெற்றால், சஜித்தின் அரசியல் அதனோடு முடிந்துவிடும். ஆனால்- அநுர பதவிக்கு வந்தால் அடுத்த சில மாதங்களிலேயே கோட்டா ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்டதுபோன்ற ஒரு நிலைமை மீண்டும் ஏற்படலாம் என்றும் அப்படி ஏற்படுகின்றபோது தேர்தல் இல்லாமலே தான் ஜனாதிபதியாகலாம் என்றும் ரணில் கணக்குப் போட்டாலும் ஆச்சரியப்பட இல்லை’ என் றார். ஜனாதிபதித் தேர்தல் களத் தில் பொதுஜன பெரமுன இல் லாதபோதிலும் அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பார் கள் என்றே நம்பப்படுகின்றது.
ஆனாலும் அவர்கள் பாராளு மன்ற தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை ரணில்
நிரா கரித்துவிட்டதால் தமது அடுத்த அரசியல் நகர்வை நோக்கி நகரத் தொடங்கியிருக்கின்றனர்.
கட்சியில் இதுவரை பஸில் ராஜபக்ஷ வகித்துவந்த தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாமல் ராஜபக்ஷ
நியமிக்கப்பட் டமையைத் தொடர்ந்து அவர் களும் கட்சிக்கு புதிய ‘இரத்தம் பாய்ச்சத்’ தொடங்கியிருக்கின்றனர்.
கடந்த வாரம் நாமல் தனது பலத்தை வெளிக்காட்ட தனது சொந்த நகரமான தங்காலையில் கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றை பிரமாண்டமாக நடத் திக் காட்டியிருக்கிறார்.
சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனராம். அவர்கள் எவ்வாறு வந்து சேர்ந்தனர் என்பதற்கு அப்பால், அத்தகைய கூட்டத்தை கூட்டக்கூடிய பலத் தோடு தாங்கள் இப்போதும் இருக்கிறோம் என்பதை சொல்லியிருக்கின்றனர்.
- ஊர்க்குருவி.