ரஷ்யாவுக்கும் உக்ரைனுக் கும் யுத்தம் தொடங்கியதும் மேற்குலகம் ரஷ்யாமீது பொரு ளாதாரத் தடையை விதித்தது. அதனால் பயனடைந்தது இந்தியாதான். ரஷ்யாவிடம் முப்பது வீதம் விலைக்கழிவில் மசகு எண்ணெயைப் பெற்று மீண்டும் ஐரோப்பாவுக்கே அனுப்பி இலாபம் பார்த்து வருகின்றது இந்தியா.
இப்போது ஈரானுக்கு எதி ராக முழு மேற்குலகமும் திரண்டு நிற்கின்றது. சிரியாவி லுள்ள ஈரான் துணைத் தூதரகத்தின்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது ஈரான். இந்தத் தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டதோடு இஸ்ரேலுக்கு ஆதரவாக முழு மேற்குலகமும் திரண்டு நின்றது.
இரு நாடுகளுக்கும் இடையே இவ்வாறு போர் பதற்றம் நிலவிய சூழலிலேயே ஈரான் அதிபர் பாகிஸ்தானுக் கும் இலங்கைக்கும் விஜயம் செய்து திரும்பியிருக்கிறார். ஈரான் அதிபரின் இலங்கை விஜயத்தை மேற்குலகம், குறிப் பாக அமெரிக்கா ரசித்திருக் காது என்பதற்கு அப்பால் தனது பலத்த கண்டனத்தையும் பதிவுசெய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையிலேயே, ஈரான் அதிபர் திட்ட மிட்டவாறு இலங்கைக்கு வந்து திரும்பியிருக்கிறார். ஈரான்மீது ஏற்கனவே அமெ ரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருந்தாலும் ஈரானே நமது முக்கிய எரிபொருள் விநியோகஸ்தர்.
இப்போது அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி தன்னை இலங்கை வரவேற்றிருப்பது ஈரானுக்கு நிச்சயம் மகிழ்ச் சிக்குரியதே. ஆனால், அப்படி அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரணில் இந்த காரியத்தைச் செய்திருப்பாரா என்பது தெரியவில்லை.
‘நாங்கள் எதிர்ப்பதுபோல எதிர்க்கிறோம், நீங்கள் அதனையும் மீறி வரவேற்பதுபோல வரவேற்று ஈரானிடமிருந்து எந்த உதவி யைப் பெறமுடியுமோ பெறுங்கள்’ என்று அமெரிக்காவே ஆலோசனை சொல்லியிருந்தா லும் ஆச்சரியப்படுவதற் கில்லை. ஏனெனில், என்ன விலைகொடுத்தும் ரணிலை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம் என்பதும் இரகசியமானது அல்லவே.
இப்போது இந்த நிலை மைகளை தனக்கு சாதக மாக்கியிருக்கிறார் ரணில் என் கின்றன அவருக்கு நெருக்க மான வட்டாரங்கள். ஈரான் ஜனாதிபதியிடம் ரணில் விடுத்த பல கோரிக்கைகளுக்கு அவர் சாதகமாகப் பதிலளித்திருக்கிறாராம். அதில் முக்கியமானது, சந்தை விலையிலும் பார்க்க மிகப்பெரிய கழிவு விலையில் எரிபொருளை விற்க ஈரான் இணங்கியிருக்கின்றது என்றும், அவ்வாறு உலக சந்தை விலையிலும் பார்க்க மலிவுவிலையில் எரிபொருள் கிடைத்தால், உடனடியாக நாட்டில் எரிபொருளின் விலையை மிகப்பெரிய அளவில் குறைக்க முடியும் என்றும் அவ்வாறு எரிபொருள் விலை குறையும்போது, தாமாகவே பல அத்தியாவசிய சேவைக ளின் விலைகளிலும் அத்தியா வசிய பொருட்களின் விலைக ளிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் நம்பும் ரணில் இவை அனைத்தும் நடந்த பின்னரே ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவிருப்பது பற்றிய அறிவிப்பை உத்தியோகபூர்வமாக வெளியிடுவார் என்றும் நம்பப்படுகின்றது.
இதனால் ரணில் ஏற்கனவே திட்டமிட்ட பல திட்டங்களைப் பின்போட்டிருக்கின்றாராம். நடக்கவிருக்கும் மே தினக் கூட்டத்தில் முழு நாடும் பிரமிக்கும் வகையில் மிகப்பெரிய சனக்கூட்டத்துடன் நடத்துவதற்கும், அந்த மேடையில் தன்னோடு கைகோக்கவிருக் கும் அனைவரையும் ஏற்றுவ தற்கும் திட்டமிட்டிருந்த ரணில் இப்போது அந்தத் திட்டத்தை மாற்றியமைத்திருக்கிறாராம். நடக்கவிருக்கும் மே தினக் கூட்டம் வெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டமாகவே நடக்கவிருக் கின்றது. ஏற்கனவே திட்டமிட்டவாறு அறுபதாயிரத்திற்கும் குறையாத மக்களை கொண்டு வந்து அந்த மே தினத்தை நடத்தும் அதேவேளையில் பொதுஜன பெரமுனவிலிருந்து வருகின்ற – அல்லது எற்கனவே வந்தவர்கள் யாரையும் மேடையில் ஏற்றாமல் தவிர்ப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கின்றதாம்.
அதைவிட முக்கியமானது, கடந்த இரண்டாயிரத்து பதி னைந்தாம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாள ராக சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை கடைசிநேரத்தில் தமது பக்கம் எடுத்து வேட்பாளராக்கியது போல, கடைசி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஏராளமானவர்களை தனது பக்கம் எடுக்கின்ற திட்டத்தில் இருக்கிறார் ரணில் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள். தனது திட்டத்தின்படி இவை அனைத்தும் நடக்கின்ற போது, தனக்கான வெற்றி நிச்சயமாகின்றபோது, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பலர் வருவார்கள் என்று நம்பும் அவர், அதுவரை தான் வேட் பாளராக போட்டியிடவிருப் பதை அறிவிப்பதையும் பின்போட்டிருக்கிறாராம்.
- ஊர்க்குருவி.