இப்படியும் நடக்கிறது

0
99

டான் ரிவியில் ஒரு நிகழ்ச்சி முன்னர் ஒளிபரப்பாகியது. பாடசாலை மாணவர் ஒரு வரை அழைத்து அவரிடம் பத்து பொது அறிவு கேள்வி களைக் கேட்பார்கள். அவர் பதில் சொல்கின்ற ஒவ்வொரு கேள்விக்கும் பரிசு வழங்கப்படும்.
நிகழ்ச்சி நடாத்துபவர் தனது கைகளில் கேள்விகள் எழுதிய காகித அட்டைகளை வைத்திருப்பார். போட்டியில் கலந்துகொள்கின்றவர் ஒரு அட்டையை எடுத்து தொகுப் பாளரிடம் கொடுக்க அவர் கேள்வியைக் கேட்பார்.
ஒரு நிகழ்ச்சியை இந்த ஊர்க்குருவி பார்த்துக்கொண்டி ருந்தபோது, அதில் கலந்து கொண்ட ஒரு மாணவன், அவன் அப்போது பத்தாம் ஆண்டில் படித்துக்கொண்டி ருந்தான். ஒவ்வொரு கேள்விக்காக வும் அவன் ஒவ்வொரு அட்டையை எடுத்துக்கொடுக்க, தொகுப்பாளர் கேள்வியைக் கேட்க, அவன் எந்தக் கேள் விக்கும் சரியான பதிலைச் சொல்லவில்லை. கடைசியாக பத்தாவது கேள்வி.
இதனையும் அவர் கையில் இருக்கும் அட்டைகளிலிருந்து கேட்காமல், மிக இலகுவான கேள்வி ஒன்றைக் கேட்டு, அந்த மாணவனுக்கு ஒரு கேள்விக்காவது பதில் சொல்லவைக்க நினைத்தாரோ தெரியவில்லை, தொகுப்பா ளர் தானாகவே ஒரு இலகு வான கேள்வியைக் கேட்டார்.
‘இந்த நாட்டின் ஜனாதி பதி யார்?’ இதுதான் கேள்வி. மாணவன் பதில் சொன்னார்: ‘டக்ளஸ் தேவானந்தா’. இந்தச் சம்பவம் தான் அந் தச் செய்தியைப் படித்தபோது ஞாபகத்திற்கு வந்தது.
தமிழ் அரசுக்கட்சியின் பெருந்தலைவர் சம்பந்தன் அவர்கள் இடையிடையே அறிக்கைகளை விடுத்து, தானும் இன்னமும் தமிழர் அரசியலில்தான் இருக்கிறேன் என்பதை காண்பித்து வருகி றார். கடைசியாக அவர் தெரி வித்ததாக கொழும்பு பத்தி ரிகை ஒன்று செய்திவெளி யிட, அதனை அப்படியே ‘கொப்பி’ பண்ணி அனேகமாக எல்லா ஊடகங்களுமே அதனை வெளியிட்டுள்ளன.
ஈழநாடும் அதனை வெளியிட தவறவில்லை. அந்த செய்தியில் அவர் எங்கு சொன்னார், எப்படிச் சொன்னார் என்பது பற்றிய விபரம் இருக்கவில்லை.
அவர் ஊடகர் ஒருவருக்கு சொல்லி யிருந்தால் நல்லதுதான். ஆனால் அப்படிச் சொல் லியிருந்தால், அவர் சொல் வதை அப்படியே கேட்டு ஊடகர்கள் செய்தி எழுது வார்களோ தெரியவில்லை.
அவரிடம் அவர் சொல்கின்ற விடயங்களிலிருந்தே சில கேள்விகளைக் கேட்டு அதற் கான பதிலையும் அவர்கள் பெற்று வெளியிட்டிருக்கலாம்.
இப்படி எழுதுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அவர் கடைசியாக சொன்ன தாக வெளிவந்த செய்தியில் அவர், ‘ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒரு வரை நிறுத்தும் விடயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு அவசரப்படவேண்டாம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி உட்பட அனைத்து தரப்பிட மும் வேண்டுகோள் விடுத்துள் ளார் என்றது அந்தச் செய்தி. அதற்கு பின்னதாக அவர் சொன்னதுதான், ‘கிளைமாக்ஸ்’.
‘நாட்டின் நீண்ட வர லாற்றை பார்க்கின்றபோது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக வரமுடியும் என்ற நிலைமைகள் உள்ளன.
இந்த நிலையில் தென்னி லங்கையின் தேசியக் கட்சிகள் தற்போது வரையில் உத்தியோ கபூர்வமாக தங்களது ஜனாதி பதி வேட்பாளர் பற்றிய அறி விப்புக்களைச் செய்யவில்லை.’ என்கிறார் சம்பந்தன். இதுவரை ரணில் விக்கிரமசிங்க மட்டுமே உத்தியோக பூர்வமாக தான் போட்டியிட விருப்பதாக அறிவிக்கவில்லை. அது தவிர பொதுஜன பெர முன வேட்பாளரை நிறுத்துமா அல்லது ரணிலை ஆதரிக்குமா என்பது இதுவரை தெரியவரவில்லை.
இந்த இருவர் பற்றியும் ஐயா அக்கறைப்பட்டு அதற்காக காத்திருக்க மாட்டார் என்பது நமக்குத் தெரிந்ததுதான். ராஜ பக்சக்களை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த மூன்று ஜனாதிபதி தேர் தல்களிலும் தமிழ் மக்களை அவர்களுக்கு எதிரான வேட் பாளர்களுக்கு வாக்களிக்கச் சொன்னவர் இவர். எனவே மகிந்த ஆதரவுடன் போட்டி யிட்டால் ரணிலுக்கும் அவர் ஆதரவு வழங்கப்போவதில்லை.
அப்படியல்லாமல் ரணில் வேறு சில கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்டாலும், அவர் பதின்மூன்றுக்கு மேலே போகப் போவதில்லை என்பது மாத்தி ரமல்ல, அதிலும் பொலிஸ் அதி காரம் இல்லாத பதின்மூன் றைத்தான்-
அதாவது பதின் மூன்று மைனஸ், அவர் தருவேன் என்று ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்து விட்டார். பதின்மூன்றை எமது தீர்வாக தொட்டும் பார்க்கமாட்டோம் என்று நீண்டகாலமாக அடம்பிடித்துவரும் சம்பந்தன் ஐயா, நிச்சயம் ரணிலுக்காக காத்திருக்கமாட்டார். அதையும்விட, அவர் சொல் லியிருப்பதில் முக்கியமானது, ‘நாட்டின் நீண்ட வரலாற்றை பார்க்கின்றபோது, பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக வர முடியும் என்ற நிலை’ இருப்ப தாக அவர் சொல்லியிருப்பது, ஏதோ தமிழ் பொது வேட்பா ளர் வெற்றிபெற்று ஜனாதிபதி ஆகுவதற்குத்தான் என்று- அர சியலில் மூன்றாம் வகுப்பு மாண வனுக்கும் தெரிந்த ஒரு விட யத்தை தனக்கு தெரியாதது போல ஐயா சொல்லியிருக்கின் றார்.
தமிழ் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுவது வெற்றி பெற்று இந்த நாட்டின் ஜனா திபதி ஆகுவதற்கு என்றுதான் நினைத்துக்கொண்டு, அவசரப் படவேண்டாம் என்கிறாரோ?. வெற்றிபெறமுடியும் என்றால் தானே கேட்போம் என்று நினைக்கிறாரோ என்னவோ?!

  • ஊர்க்குருவி.