இப்படியும் நடக்கிறது

0
84

தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தை எப்படியும் நிறைவேற்றி விடவேண்டும் என்று பெரும்பா லான சிவில் அமைப்புகளும் சமூகத்திலுள்ள முக்கிய புத்திஜீவிகள் சிலரும் பொது அமைப்புகள் சிலவும் தீவிரமாக முயன்றுகொண் டிருக்க, ஒரு சில அரசியல் கட்சி களும் அதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றன.
அதனை முளையிலேயே கிள்ளி விடுவதற்கு சிலர் அதிதீவிர முயற்சி எடுத்தபோதிலும் அது சாத்திய மாகாமல் போகவே தமக்குத் தெரிந்த தான- தண்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்கள், ‘அவரை’ வெல்ல வைப்பதற்காகத்தான் அதில் முன்ன ணியில் நிற்கின்றனர் என்பவர்கள் – அதற்காக அவர்கள் ‘டீல்’ போட்டு விட்டார்கள் என்பவர்கள் – அதனை மூர்க்கத்தனமாக எதிர்ப்பவர்கள் யாருடன் டீல் போட்டார்கள் என்பதை இதுவரை யாரும் கேள்விக்கு உட்படுத்தவில்லை. ஒருவர் எதிர்க்கிறார் என்பதற்காகத் தாமும் எதிர்த்தால் அவரின் ‘கடைக்கண்’ பார்வை தம்மீது விழும் என்பதற்காக எதிர்ப்பவர் களும் – ஒருவர் பச்சை நிறத்தை சிவப்பு என்றால், அவர் சொல்கிறார் என்பதற்காக அது பச்சை என்று தெரிந்துகொண்டே தாமும் அதனை சிவப்பு என்று சொல்கின்றவர்களும் அதனை எதிர்ப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. அதுவல்ல நாம் இன்று சொல்லவருவது, இந்த முயற்சியை ஆரம்பம் முதலே எதிர்த்து வருபவர் தமிழ் அரசின் யாழ்ப்பாண மாவட்ட எம். பி. சுமந்திரன் என்பது தெரிந்தது தான்.
அவரோ, இந்தப் பொதுவேட் பாளராக தன்னைப் போட்டியிடுமாறு ஈ. பி. ஆர். எல். எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டார் என்பதும். அவர் பொய் சொல்கி றார் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் மறுத்திருப்பதும் பலரையும் புரு வத்தை உயர்த்த வைத்திருக்கின்றது.
அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை இந்த விடயத்தை முதன்முதலில் பொதுவெளியில் பேசத் தொடங்கியவர் சுரேஷ் பிரே மச்சந்திரன்தான். அதனால், அவர் தன்னை வேட்பாளராகப் போட்டியிடுமாறு கேட்டார் என்பது இதுவரை அதனை எதிர்த்து வந்தபோது தெரிவித்த கருத்து களுக்கும் இதற்கும் பலத்த வித்தி யாசம் உண்டு. அதனை எதிர்க் கின்றபோது அதற்கான காரணங்களைச் சொன்ன சுமந்திரன், இப்போது தன்னைப் போட்டியிடக் கேட்டார் என்பது அந்த விடயத்தை ஒரு நகைச்சுவை விடயமாக்குவ தற்கான முயற்சியோ என்று கேட்காமல் இருக்கமுடியவில்லை.
இதுவரை பொதுவேட்பாளர் ஒருவரை களம் இறக்குகின்ற விடயத்தில் ஒரு பொது உடன்பாட்டுக்கு அரசியல் கட்சிகள் வந்துவிட வில்லை. அதைவிட, எந்தக் கோரிக்கையை முன்வைப்பது என்பது குறித்தும் ஒரு பொது உடன்பாட்டுக்கு வரவில்லை. இந்த இலட்சணத்தில் யாரை வேட்பா ளராக்குவது என்பது பற்றி சிந்திக் கின்ற அளவுக்கு சுரேஷ் பிரே மச்சந்திரன் சிந்தித்திருப்பார் என்று இந்த ஊர்க்குருவி நம்பவில்லை.
தமிழ் அரசு கட்சியே இன்னமும் அதற்கு உத்தியோகபூர்வமாக தனது முடிவைச் சொல்லவில்லை. அப்படி யிருக்கையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை – அதுவும் இந்த விடயத்தில் ஆரம்பம் முதலே எதிர்த்துவரும் ஒருவரை நீங்களே போட்டியிடுங்கள் என்று கேட்கின்ற அளவுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் இருப்பார் என்றும் நம்புவ தற்கில்லை. தான் அப்படிக் கேட்கவில்லை. சுமந்திரன் பொய் சொல்கிறார் என்று சுரேஷ் கூறிய பின்னர், இது வரை – அதாவது இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்வரை சுமந்திரன் எங்கும் பொதுவெளியில் அதனை மறுத்ததாகவும் தெரியவில்லை.
இதுவரை அதனை பகிரங்கமாக எதிர்த்துவந்த ஒருவர் இப்போது இவ்வாறு தெரிவித் திருப்பது எதற்காக என்பதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் பிரசாரத் தின்போது ஒரு வேட்பாளர், அமெரிக்கா தான் தலைவராக வருவதையே விரும்புகின்றது என்றும் தான் தலைவராக வந்தால், அமெரிக்கா எமது பிரச்னையை தீர்த்துவைக்க உதவும் எனவும் பிரசாரம் செய்ததுபோல இப்போது சிலர் – சில இராஜதந்திரிகளை தமக்கு பக்கத்துணைக்கு அழைக்கத் தொங்கியிருக்கின்றனர்.
அப்படி பொதுவேட்பாளர் ஒருவரை நீங்கள் நிறுத்தினால் – அந்தக் கோரிக்கைக்கு மக்கள் ஆதரவு வழங்காமல் அவர் கணிச மான வாக்குகளை பெறாமல் விட்டுவிட்டால், நாங்கள் உங்களுக்கு உதவ முடியாமல்போய்விடும் என்று சில இராஜதந்திரிகள் நமது தலைவர் ஒருவரிடம் நேரடியாக தெரிவித்தனர் என்று சிலர் எழுதி வருகின்றனர்.
முதலில், இராஜதந்திரிகள் இவ்வாறு நேரடியாக சொல் வார்களா என்பது இராஜதந்திரிகளு டன் பழகுகின்றவர்களுக்கு தெரியும்.
அப்படியும் இல்லாமல் அவர்கள் அப்படி சொல்லியிருந்தா லும் கூட நமது கோரிக்கை நிச்சயம் சமஷ்டிக்கு குறைவானதாக இருக்கப் போவதில்லையே. எந்த இராஜ தந்திரிதான் நமது சமஷ்டி கோரிக்கைக்கு இதுவரை ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்? இதுவரை எமது நியாயமான கோரிக்கை எதற்காகவும் குரல்கொடுக்காத வர்கள் இப்போது மக்கள் வாக்க ளிக்காமல் விட்டால் தாங்கள் உதவப்போவதில்லை என்று சொல்கிறார்கள் என்பது தமிழ் அரசு தலைவர் பதவிக்காக போட்டியிட் டவர் கூறிய கதை போன்றதுதான்.!
கேவலம் இந்தப் பதின்மூன்றைக் கூட முழுமையாக அமுல்படுத்தச் சொல்லி இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கமுடியாத இராஜ தந்திரிகள் சமஷ்டிக்குக் குறையாத கோரிக்கை ஒன்றுக்காக, தமிழ் மக்கள் ஆதரிக்காமல் விட்டால் தாங்கள் உதவமாட்டார்களாம். எப்படி எப்படியெல்லாம் செய்து- சொல்லி- இந்தப் பொதுவேட்பாளர் போட்டியிடு வதை தடுக்கலாம் என்று சிந்திக் கின்றவர்கள், எப்படி தமிழ் மக்களை வாக்களிக்கப் பண்ணலாம் என்று சிந்தித்தால் அதுவே வெற்றியை நோக்கி நகர்த்தும்.!

  • ஊர்க்குருவி.