இப்படியும் நடக்கிறது

0
83

அண்மையில் ஒரு முக்கிய நபரிடம் கேட்டேன், ‘தெற்கில் நிலைமைகள் எப்படியிருக் கின்றன? யார் அடுத்த ஜனாதி பதியாக வருவார் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?’ என்று. அவர் இந்த நாட்டில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களையும் கவனிக்கும் ஒருவர் என்பதால் அவரிடம் கருத்தை அறிவது நல்லது என்பது எனது எண்ணமாக இருந்தது.

அவர் சொன்னார், ‘ஜூலை கடைசியில் வேண்டுமானால் கேளுங்கள் – ஓரளவுக்கு சொல் லக்கூடியதாக இருக்கும். ஆனால், இப்போது சொல்வது சற்றுக்கடினம்.’ விளக்கமாக அறியும் ஆவல் எனக்கு – ‘இப்போது நிலைமை எப்படி என்றேன்?’ அவர் தெளிவாக சொன்னார், ‘கடைசிக் கட்டங்களில் நடக்கும் கட்சித் தாவல்கள், நமது பக்கத்து நாடு யாரை ஆதரிக்கப்போகின்றது என்ற விடயங்கள் போன்றவை தேர்தல் முடிவுகளில் தாக் கத்தை ஏற்படுத்தும்’- என்றவர், ‘ரணிலிடம் இருந்து மற்றப் பக்கத்துக்கு செல்வதற்கு அவரிடம் ஆட்கள் இல்லை என்பதால், சஜித் தரப்பிலிருந்து தான் ரணில் பக்கம் கட்சித் தாவல்கள் நடக்கலாம்’ – என்றார். அத்துடன், ‘எதற்கும் கொஞ்சம் பொறுத்திருங் களேன்’, என்றார். பக்கத்து நாடு, சஜித் தரப்பையும் ரணில் தரப்பையும் ஓரணியில் கொண்டுவர எடுத்த முயற்சி பெரும்பாலும் தோல்வியை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது என்ப தால் இனி யாரை ஆதரிப்பது என்பதை அவர்கள் முடிவெடுக்கலாம்.

அவர்களைப் பொறுத்த வரை – யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை எப்படி கையாள்வது என்பது தெரிந்ததுதான். ஆனாலும் மாலைதீவில் நடந்ததுபோல ஏதேனும் இடக்குமுடக்காக நடந்து விட்டால்…? என்பதிலும் அவர்கள் கவனமாக இருக்கின் றனராம்.

இதனால் தமது விருப்பம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வாறு வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படு கின்றது. இதேவேளை, அந்த பிர முகர் சொன்னதுபோலவே, சஜித் தரப்பிலிருந்து சிலர் ரணில் பக்கம் செல்வதற்கும் தயாராகி வருகின்றனர் என்ற செய்திகள்தான் இப்போது அரசல்புரசலாக வருகின் றன. சஜித் கட்சியின் தவிசாளராக இன்றும் இருக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, களுத்துறையில் தனக்கென்று சில பத்து ஆயிரம் வாக்குகளை வைத்திருக்கும் ராஜித சேனாரத்ன போன்றவர்கள் கட்சி தாவுவது ஓரளவுக்கு உறுதி யாகிவிட்டாலும் கூட கட்சிக்கு ஆட்களைப் பிடிப்பதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட வர்கள் தொடர்ந்து தமது முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர் என்கின்றன தெற்கில் இருந்து கிடைக்கும் செய்திகள்.

தமது அரசாங்கத்துடன் இணைந்தால் பத்து ஏக்கர் நிலம் தரலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவருக்கு அரசாங்க தரப்பில் இருந்து பேரம் பேசப்பட்டுள்ள தாக சிங்கள வார ஏடு ஒன்று அண்மையில் செய்தி வெளி யிட்டிருந்தது. ‘சமீபத்திய அரசியல் வட்டாரங்களின்படி, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஆட்களை தமது பக்கத்துக்கு இழுக்கும் முயற்சி பெருவெற்றி பெற வில்லையென்றாலும் அவர்கள் தமது முயற்சியை கைவிடவில்லை’ என்கின்றது அந்தப் பத்திரிகை செய்தி.

கேகாலை தொகுதி ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒரு வரும் கட்சி மாறப்போகிறார் என்று அடிக்கடி கூறப்பட்டு வந்தது. ஆனால், அவரை அணுகிய அரசதரப்பு பிரதிநிதி ஒருவர், ‘அரசாங்கத்துக்கு வந்தால் பத்து ஏக்கர் நிலம் காணிக்கையாகக் கிடைக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்.

இது அந்த பிரமுகருக்கு பலத்த கோபத்தை உண்டாக் கியது. பரம்பரை ரீதியாக மிகவும் வசதியான ஒருவரான அந்தப் பிரமுகர் இதனைக் கேட்டு கடுப்பானதுடன், ‘என்னிடம் இல்லாத காணியா? யார் யாரிடம் எதனைக் கொடுக்க முன்வரவேண்டும் என்பதைக் கூட அறியாதவர் களை இப்படி பேரம் பேச அனுமதித்திருக்கிறார்களே’ என்று நொந்து கொண்டா ராம்.

‘என்னுடைய பெறுமதி பத்து ஏக்கர் நிலமாக மாறி விட்டது.’ என்று கடிந்து கொண்ட அவர், இந்தத் தகவலை உரியவரிடமே முறை யிட்டிருக்கிறாராம். அரச தரப்பில் நடக்கும் இதுபோன்ற முயற்சிகளுக்கு மத்தியில், ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலும் இதனை தடுக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்த கட்சியின் செயலாளரையே பொறுப்பாகக் களம் இறக்கியிருக்கிறார்களாம்.

கட்சியிலிருந்து வெளியேறக் கூடியவர்களை அவ்வாறு வெளியேறாமல் தடுக்கின்ற இந்த முயற்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவே பொறுப்பாக நியமிக்கப்பட்டி ருக்கின்றாராம்.

கடந்த காலத்தில் கட்சிமீது சற்று கோபத்தில் இருந்தவர்களுடன் அவர், தனித்தனியாக சந்தித்து பேச்சு நடத்தத் தொடங்கியிருக்கிறார் என்கின் றன ஐக்கிய மக்கள் சக்தி வட் டாரங்கள்.

இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சக்தியில் பிரச்னைகளை கிளப்பி வருபவர்களை மிக விரைவில் அடக்க வேண்டும் என்ற கருத்தையும் மூத்த தலை வர்கள் முன்வைத்துள்ள னர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஊர்க்குருவி.